சனி, பிப்ரவரி 10, 2018

தெற்கிலிருந்து ஒரு சூரியன்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் பொன்மாலைப் பொழுது என்கிற நிகழ்வு நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற, முக்கியமான ஆளுமைகளை பல்வேறு துறைகளிலிருந்து அழைத்துவந்து உரையாற்ற வைக்கின்றனர். வாரம் தவறாமல் அந்த காணொளிகளை யூடியூப்பில் பார்ப்பேன். ஒரு நாள் 'தி இந்து-தமிழ்' நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அற்புதமா பேச்சு. அந்த பேச்சு முழுவதும் திராவிடக்கட்சிகள் தமிழகத்திற்கு செய்த திட்டங்களையெல்லாம் விளக்கி, திராவிடக்கட்சிகளுக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார். அற்புதமான பேச்சு. வாய்ப்பிருந்தால் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். இணைப்பு இங்கே.

அந்த உரையில் தி இந்து தமிழ் நாளிதழின் சார்பாக தமிழகமே பெருமைப்படும் அளவிற்கான ஒரு ஆய்வு பணியை செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் அது புத்தகமாக வெளிவரும் என்று கூறியிருந்தார். அப்போது அது என்னவாக இருக்கும் என்று ஆர்வம் அதிகரித்து விட்டது. கொஞ்ச நாளில் 'தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்' புத்தகம் பற்றிய அறிவிப்பு தி இந்துவில் வெளிவந்தது. மகிழ்ந்து போனேன். உண்மையிலேயே படித்து பாதுகாக்கப்பட்ட வேண்டிய ஆவணம்தான்.

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிட கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சட்டமன்ற பணியின் அறுபதாண்டு ஆகியவைகளையொட்டி இந்த புத்தகம் வெளியிட்டப்பட்டிருக்கிறது.

திராவிட இயக்கங்கள் என்ன செய்தது தமிழ்நாட்டிற்கு? திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டை சீரழித்து விட்டன என திராவிடத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கும், அவதூறுக்கும் சரியான பதிலடியை கொடுக்கும் விதமாக பல்வேறு அறிஞர்கள், பல மாநிலங்களின் அரசியல் ஆளுமைகள் என அனைவரிடமிருந்தும் கருத்துக்களை சேகரித்து மிகப்பெரிய ஆவணப்பெட்டகமாக கடுமையான உழைப்போடு இந்த புத்தகத்தை தி இந்து தமிழ் குழு உருவாக்கியிருக்கிறது. இந்த புத்தகத்தை உருவாக்கிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

புத்தகம் வெளிவந்த பிறகு சில முக்கியமான கட்டுரைகளை தி இந்துவில் நடுப்பக்கத்தில் வெளியிட்டு வந்தார்கள். அதில் சண்முகநாதனின் பேட்டி பலத்த வரவேற்பை பெற்றது.
புத்தகத்தின் விலை ரூ.200 ஆனால் இருக்கும் செய்திகளோ விலைமதிப்பில்லாதது. புத்தகத்தின் எந்த பக்கத்திலும் சொல்லப்பட்ட கருத்துக்களே திரும்பவும் இடம்பெறாமல், அனைத்தும் புதிய புதிய தகவல்களாக இடம் பெற்றிருப்பது புத்தகத்தின் சிறப்பு.
தெற்கிலிருந்து ஒரு சூரியன்! - ஃபர்ஸ்ட் லுக்கை திராவிடர் கழக தலைவர், ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டார். தொடக்கமே அதிரடியாக இருந்தது. திராவிடத்தின் ஊற்றுக்கண்ணே பெரியால் திடல்தானே!

திமுக தோழர்கள், திராவிட இயக்க ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், அரசியல் நோக்கர்கள் என அனைவரும் வாங்கி, படித்து, பாதுகாக்க வேண்டிய அரிய கருவூலம் இந்நூல் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை, இதனை பாரம்பரியம் மிக்க 'தி இந்து குழுமம்' வெளியிட்டிருப்பது பெருமைக்குரியது.  என்று திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
  1. கே.அசோகன், ஆசிரியர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
  2. தே.ஆசைத்தம்பி, பத்திரிக்கையாளர், நடுப்பக்க ஒருங்கிணைப்பாளர், 'தி இந்து' தமிழ்
  3. வ.ரங்காசாரி, பத்திரிக்கையாளர், நடுப்பக்க ஆலோசகர், 'தி இந்து' தமிழ்
  4. ச.சிவசுப்பிரமணியன், பத்திரிக்கையாளர், தலைமை உதவி ஆசிரியர், 'தி இந்து' தமிழ்
  5. சமஸ், பத்திரிக்கையாளர், நடுப்பக்க ஆசிரியர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
  6. கோபாலகிருஷ்ண காந்தி, ராஜதந்திரி, மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர், காந்தியின் பேரன்
  7. சுப.வீரபாண்டியன், பெரியாரியர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர், தமிழ்ப் பேராசிரியர்
  8. விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்
  9. கே.எஸ்.இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர், எழுத்தாளர்
  10. தேவ கௌடா, கர்நாடக முதல்வர், முன்னாள் பிரதமர்
  11. ஆர்.விஜயசங்கர், பத்திரிக்கையாளர், ஆசிரியர், ஃபிரன்ட்லைன்
  12. அமர்த்தியா சென், பொருளியல் அறிஞர், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்
  13. ழீன் தெரெசே, பொருளியல் அறிஞர்
  14. டேவிட் ஷூல்மன், இஸ்ரேலிய அறிஞர், சங்க இலக்கியத்தை ஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்தவர்
  15. பிரேர்ணா சிங், ஆய்வறிஞர், ப்ரௌன் பல்கலைக்கழகம், அமெரிக்கா
  16. முகமது யூசுஃப் தாரிகாமி, சமூகவியல் அறிஞர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
  17. யோகேந்திர யாதவ், சமூவியல் அறிஞர், ஆம்ஆத்மி கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்
  18. அமன்தீப் சிங் சந்து, பஞ்சாபைச் சேர்ந்த, பத்திரிக்கையாளர், எழுத்தாளர்
  19. பிரதீப் பாஞ்சுபாம், மணிப்பூரைச் சேர்ந்த ஊடகவியலாளர், 'இம்பால் ஃப்ரீ ப்ரெஸ்' நாளிதழின் ஆசிரியர்
  20. கர்க சட்டர்ஜி, வங்கத்தைச் சேர்ந்த ஆய்வறிஞர், இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பணிபுரிகிறார்
  21. வைபவ் ஆப்னாவே, ஆய்வறிஞர், மாராத்தி ஆவணப்பட இயக்குநர்
  22. பால் சக்கரியா, மலையாள எழுத்தாளர், சமூவியல் அறிஞர்
  23. சித்தலிங்கையா, கன்னடக் கவிஞர், சமூவியல் அறிஞர்
  24. கல்பனா கண்ணபிரான், வரலாற்றறிஞர், இயக்குநர், சிஎஸ்டி, ஹைதராபாத்
  25. கே.கே.மகேஷ், பத்திரிக்கையாளர், சிறப்புச் செய்தியாளர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
  26. க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்
  27. கி.வீரமணி, திராவிடர் கழக தலைவர்
  28. கலி.பூங்குன்றன், துணைத்தலைவர், திராவிடர் கழகம்
  29. கே.சந்துரு, நீதித்துறை வல்லுநர், மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதி மன்றம்
  30. ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வறிஞர், எம்ஜடிஎஸ், சென்னை
  31. வெ.சந்திமோகன், பத்திரிக்கையாளர், முதுநிலை உதவி ஆசிரியர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
  32. சுபகுணராஜன், வரலாற்று ஆய்வாளர், முன்னாள் கலால் துறை அதிகாரி
  33. ஓவியா, பெண்ணியச் செயல்பாட்டாளர், எழுத்தாளர்
  34. சல்மா, கவிஞர், முன்னாள் பேரூராட்சித் தலைவர், சிறந்த நிர்வாகிக்கான விருது வென்றவர்
  35. தொல்.திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
  36. எஸ்.ராஜன், வழக்கறிஞர், ஊராட்சி மன்றத் தலைவர்
  37. கோம்பை அன்வர், வரலாற்றாய்வாளர், ஆவணப்பட இயக்குநர்
  38. ராஜன் குறை, சமூக ஆய்வாளர், டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்
  39. தொ.பரமசிவன், ஆய்வாளர்
  40. அனந்த கிருஷ்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
  41. வி.ஆர்.முரளிதரன், சென்னை ஐ.ஐ.டி, பொருளாதார துறைப் பேராசிரியர்
  42. ஆர்.விரப்பன், பொறியியல் நிபுணர்
  43. எம்.எஸ்.சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி
  44. நாகநாதன், முன்னாள் மாநில திட்டக்குழு துணைத்தலைவர்
  45. இரா.கண்ணப்பன், ஐ.நா சபை ஈராக் பாகுரா அலுவலகத் தலைவர்
  46. மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர், செயல் தலைவர் தி.மு.க
  47. கவிஞர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர், கலைஞரின் மகள் 
  48. சண்முகநாதன், கலைஞரின் செயலாளர்
  49. யோகா, புகைப்பட கலைஞர்
  50. கரு.முத்து, பத்திரிக்கையாளர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
  51. சிற்பி செல்வநாதன், சிற்பி கணபதி ஸ்தபதியின் சகோதரர் மகன்
  52. இமையம், எழுத்தாளர்
  53. மேனா உலகநாதன், பத்திரிக்கையாளர்
  54. ஆர்.நல்லக்கண்ணு, மூத்த பொதுவுடைமை இயக்கத் தலைவர்
  55. காதர் மொகதீன், தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
  56. செல்வ புவியரசன், பத்திரிக்கையாளர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
  57. துரைமுருகன், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர்
  58. பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தின், திமுக செயலாளர்
  59. ஏ.எஸ்.பன்னீர்செல்வம், பத்திரிக்கையாளர், 'தி இந்து'
  60. பேராசிரியர் க.அன்பழகன், பொதுச்செயலாளர், திமுக
  61. ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
  62. ஹண்டே, அதிமுக
  63. பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்
  64. கே.சுப்ராயன், இந்திய கம்யூனிஸ்ட்
  65. பாலபாரதி, மார்க்சிஸ்ட்
  66. வேலாயுதம், பாஜக
  67. ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்
  68. நாஞ்சில் குமரன் ஐ.பி.எஸ்
  69. சீனிவாசன், இந்தியா சிமெண்ட்
  70. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
  71. கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம்
  72. எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் கர்நாடக முதல்வர்
  73. சேகர், விவசாயி
  74. என்.ராம், மூத்த பத்திரிக்கையாளர், 'தி இந்து' பதிப்பகக் குழுமத் தலைவர்
  75. டி.ஜே.எஸ்.ஜார்ஜ், சமூகவியல் அறிஞர், மூத்த பத்திரிக்கையாளர், தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்
  76. சுகுமாரன், கவிஞர், மூத்த பத்திரிக்கையாளர், பொறுப்பாசிரியர், காலச்சுவடு
  77. வாஸந்தி, மூத்த பத்திரிக்கையாளர்
  78. நக்கீரன் கோபால்
  79. முரசொலி செல்வம்
  80. வைரமுத்து, கவிஞர், பாடலாசிரியர்
  81. கலாப்ரியா, மூத்த கவிஞர், இலக்கிய விமர்சகர்
  82. எம்.எஸ்.எஸ்.பாண்டியன், வரலாற்றறிஞர்
  83. ராதிகா, நடிகை

சினிமா துறையிலிருந்து.....
  1. சிவாஜி கணேசன்,
  2. கவிஞர் கண்ணதாசன்
  3. எம்.எஸ்.சுவாமிநாதன்
  4. பாரதிராஜா
  5. கமல்ஹாசன்
  6. ரஜினிகாந்த்
  7. மணி ரத்னம்
  8. ஏ.ஆர்.ரஹ்மான்

பொதுமக்கள் சார்பாக.....
  1. கொள்கை பிடிப்பு குஞ்சலம், புயந்துரை, நாகை
  2. மாசிலாமணி, செண்பகராமன்புதூர், நாகர்கோவில்
  3. கமலம், கீழப்பழுவூர், அரியலூர்
  4. டான் அசோக், மதுரை
  5. மதுரைவீரன், தஞ்சாவூர்
  6. சாம்ராஜ, கோணாங்கிநாயக்கன அள்ளி, தருமபூரி
  7. செல்வராஜ், மேட்டூர், தென்காசி
  8. மு.அப்துல்கலாம், மதுரை
  9. இளங்.கார்த்திகேயன், மகாதேவப்பட்டணம்

என மிகப்பெரிய ஆளுமைகளிலிருந்து, சாதரண பொதுமக்கள் வரை அனைவரும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றியும், திராவிடர் இயக்கத்தின் சாதனைகளைப் பற்றியும் எடுத்துக்கூறியிருக்கின்றனர். பேட்டி, கட்டுரை, அனுபவ பகிர்வு ஒரு கலவையாக, படிப்பவர்களுக்கு அலுப்புத்தட்டாமல் தமிழகத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இணையம் மூலமாக அரசியலையும், வரலாற்றையும் தெரிந்து கொள்ள முற்படும் இன்றைய இளைஞர் அனைவரும் படித்து உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம்.
கலைஞரின் பேட்டி, வணக்கம் தலைவர் இல்லம், ஆறு தருணங்கள், அறிவாலாயத்தின் கதை, மத்தியில் கூட்டாச்ச மாநிலத்தில் சுயாட்சி, கருணாதிதியின் கட்டுமானங்கள், கலைஞர் எழுதியி அண்ணா இதய மன்னா என்று தனியாக பல சிறப்பு கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
இந்தியாவில் கலைஞரைப் போல வரலாறு கொண்ட ஒரு அரசியல் தலைவர் இருக்க வாய்ப்பில்லை என்பது இந்த புத்தகத்தைப் படித்த முடித்த பின்பு தெரிந்து கொண்டேன். என்ன உழைப்பு! உழைப்பு என்றால் கலைஞர்தான். கலைஞர் அடிக்கடி சொல்வாராம் ஒரு நாள் இரண்டு நாளுக்குச் சமம் என்று. நானெல்லாம் சனி, ஞாயிறு விடுமுறையை வெட்டியாகவே வீணடித்துக்கொண்டிருக்கிறேன்.
தமிழகத்தில் எளிமையான அரசியல் தலைவர் என்றால் அது காமராஜர்தான் என்பது பிரச்சாரம் செய்யப்பட்ட ஒன்று. ஆனால் தமிழகத்தில் எளிமையான தலைவரென்றால் அது அறிஞர் அண்ணாதான் என்று சமஸ் அந்த காணொளியில் கூறியிருந்தார். உண்மையும் அதுதான். சில புதிய புரட்சியாளர்கள் காமராஜரை தூக்கிப்பிடிப்பது கூட அண்ணா, கலைஞரை இருட்டடிப்பு செய்யவே. இந்த புத்தகம் அந்த இருட்டடிப்பில் சூரிய வெளிச்சத்தைப் பாய்ச்சும். 2017 -ஆம் ஆண்டு நான் வாசித்த புத்தகங்களில் சிறந்த புத்தகமாகவும் எனக்கு பிடித்த புத்தகமாகவும் இதை கருதுகிறேன். இந்த புத்தகத்தில் நான் அடிக்கோடிட்டு வைத்துள்ள செய்திகளை தனியாக தொகுத்து ஒரு பதிவு செய்யலாம் என திட்டம் வைத்திருக்கிறேன். திராவிடர் இயக்க ஆதரவாளனாக நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகள் அனைத்திற்கும் வலுவான செய்திகளுடனும், ஆதாரத்துடனும் இதில் பதில் இருக்கிறது.
வாழ்க திராவிடம்!

புதன், அக்டோபர் 15, 2014

A.T.M.இல் பணம் எடுப்பவரா நீங்கள்? – புதிய‌ நடைமுறைகளும்! சமாளிக்கும் வழிகளும்!

A.T.M.இல் பணம் எடுப்பவரா நீங்கள்? – புதிய‌ நடைமுறைகளும்! சமாளிக்கும் வழிகளும்!

ஏ.டிஎம்.இல் பணம் எடுப்பவரா நீங்கள்? – அதன் புதிய‌ நடைமுறை களும்! சமாளிக்கும் வழிகளும்! இதோ உங்களுக்காக‌
இனி ஏடிஎம் கார்டுமூலம் தினமு ம்  100 ரூபாய் எல்லாம் நீங்கள் எடுக்க முடியாது. அப்படி எடுத்தா ல், எக்கச் சக்கமான பணத்தைப் பயன்பாட்டுக் கட்டணமாக கட்ட வேண்டியிருக்கும். வருகிற நவம் பர் 1-ம் தேதியிலிருந்து இந்தப் புதிய விதிமுறையை அமல்படுத்த வங்கிகளுக்கு மத்திய
ரிசர்வ் வங்கி ஒப்புதல் தந்து விட்டது.
ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படு த்தப்பட்டதன் நோக்கமே, வங்கி க்குப் போய் வரிசையில் நின்று பணம் எடுப்பதைத்தவிர்க்கவும், அதிகப்பணத்தைப் பாதுகாப்பா க வங்கியில் சேமித்து வைக்க வும்தான். ஆனால், இன்று அந்த ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படு த்துவதைக் குறைக்க ஆர்பிஐ புதிய விதி முறைகளைக் கொண்டு வந்திருப்பது வேடிக்கைதான். ஏடிஎம்மைப் பயன்படு த்துவதில் புதிதாக கொண்டு வரப்பட்டிரு க்கும் நடைமுறைகள் என்னென்ன என் று முதலில் பார்த்துவிடுவோம்.
1.சேமிப்புக்கணக்கு வைத்திருக்கும் ஒரு வர்தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி யில் ஒரு மாதத்துக்கு ஐந்து முறை எந்த விதக் கட்டணமும் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதற்குப்பின் வங்கிகள் தே வைப்பட்டால் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கலாம்.
2. வங்கிக் கணக்கு அல்லாத மற்ற வங்கிகளில் பயன்படுத்த ஐந்து வாய்ப்புகள்தான். அதுவும் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறையும், சென்னை, கொ ல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்க ளில் உள்ள ஏ டிஎம்களில் மூன்று முறையும் பய ன்படுத்தலாம். அதற்குமேல் செய்யும் பரிமாற்ற ங்களுக்குப் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக் கப்படும்.
3. இதற்கான கட்டணமாக 20 ரூபாய் வரையும், அதோடு வேறு ஏதாவது சேவைக்கட்டணம் இ ருந்தால் அதனையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளலாம்.
ஆர்பிஐயின் இந்தப் புதிய நெறிமுறை கள் மக்களை பெரிய அளவி ல் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேக மும் இல்லை. இன்று சம்பாதிக்கும் அனைவருமே பணத்தை மொத்தமா கக் கையில் வைத்துக் கொண்டு செ லவழிப்பதில்லை. சராசரியாக இந்தி யாவில் வங்கிக் கணக்கு வைத்திருக் கும் ஒருவர் மாதத்துக்கு ஏடிஎம்மில் 10 – 12 முறை பரிவர்த்தனை செய்கி றாராம். தமிழகத்தில் தேசிய சராசரி யைவிட பயன்பாட்டு விகிதம் சற்று அதிகமாகவே உள்ளது.
அதிலும் மற்ற வங்கி ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்துவது என்ப து மொத்த பயன்பாட்டில் 35–40% என்ற அளவில் இருந்தாலும், கணக்கு வைத் திருக்கும் வங்கியில் ஒரு மாதத்துக்கா ன பயன்பாடு என்பது குறைந்தபட்சம் 8–10 என்ற அளவிலும் உள்ளது. வாடிக் கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை தரு வதற்காக எக்கச்சக்கமாக செலவு செய் ய வேண்டியிருப்பதால் பயன்பாட்டுக் கட்டணத்தை விதிக்க வேண்டும் என வங்கிகள் ஆர்பிஐயிடம் கோரிக்கை வைத்ததால், இப்போது இந்தப்புதிய விதிமுறைகளைக்கொண்டு வந்திருக்கிறது ஆர்பிஐ.
ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏடிஎம் இயந்திரங்கள் நாடு முழுக்க துவங்கப்பட்டதற்கு கார ணமே பணம் எடுப்பதற்காக எல் லோரும் வங்கியைத் தேடி வர வேண்டியதில்லை. காரணம், வ ங்கியில் ஊழியர்கள் எண்ணிக் கை போதிய அளவில் இல்லை. இதனால் வாடிக்கையாளர்களி ன் நேரம் வீணாகிறது என்கிற மா திரியான பல காரணங்களினால் தான்.
கடந்த காலங்களில் வங்கி ஊழியர் களின் எண்ணிக்கையை கணி சமாக உயர்த்துவதற்கு எந்த நடவடி க்கையும் எடுக்காத வங்கிகள் ஏ டி எம் இயந்திரங்களின் எண்ணிக்கை யை மட்டும் போட்டி போட்டுக் கொ ண்டு உயர்த்தியது. வங்கிக்கே வரா தீர்கள். உங்களின் எல்லா வேலைக ளையும் ஏடிஎம் இயந்திரம் மூலமே செய்து கொள்ளுங்கள் என்று எல் லா வங்கிகளும்சொன்னது. கேட்காமலே ஏடிஎம் கார்டு தந்துவிட் டு, புதிய தொழில்நுட்பத்துக்குப் பழக்கப்படுத்திய பின், இப்போது திடீரென ஐந்து முறைக்குமேல் எடு த்தால் கட்டணம் என்று சொல்வது வாடிக்கை யாளர்களுக்கு பெரும் பாதிப்பையே ஏற் படுத்தும்.
சரி இனிவங்கிக்கே நேரடியாகச் சென்று பணத்தை எடுக்கலாம் எனில், அங்கும் நீங்கள் பணத்தைச் செலவழிக்கத் தான் வேண்டும். வ ங்கியில் சேமிப்புக் கணக்கு வைத் திருக்க, அதைப் பராமரிக்க என ஆண்டுக்கு 60 ரூபாய் தொடங்கி 500 ரூபாய் வரை செல்கிறது. சில தனியார் வங்கிகள் 1,000 ரூபாய் கூட வசூலிக்கின்றன. (சில தனி யார் வங்கி களில் மாதத்துக்கு நா ன்குமுறை மட்டுமே நேரடியாக வங்கிக்குச் சென்று பரிவர்த்தனை செய்ய முடியும். அதற்கு மேல் சென் றால், 90 ரூபாய் சேவைக்கட்டணம் என்ற அளவிலும், 1,000 ரூபாய்க்கு 5 ரூபாய் என்ற அளவிலும் கட்டணம் வசூலிக்கின்றன.)
எல்லாவற்றுக்கும் மேலாக, நேர த்தைச் செலவழித்துதான் வங்கிக் குச் சென்றுவர வேண்டும். பொது த்துறை வங்கிகளில் இன்றும் இன்டர்நெட் தொழில்நுட்பம் பல சமயங்களில் செயலிழப்பதால், அது சரியாகும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அல்லது மீண்டுமொருநாள் வங்கிக்குச் செல்லவேண்டிய கட்டாய ம் ஏற்படுகிறது. இதுமாதிரியான அலைக்கழிப்புகளுக்கு வங்கிகள் என்ன இழப்பீட்டை வாடிக்கையா ளர்களுக்கு தரப்போகிறது என்று கேட்கிறார்கள் மக்கள்.
தற்போது வந்திருக்கும் புதிய விதி முறைகள்படி வங்கிகளுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றாலும், புதிய கட் டணங்களினால் ஏடிஎம் பயன்பாடு குறைந் து வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு நேர டியாக வரும் பட்சத்தில் அங்கு ஊழியர்களி ன் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தால் மட்டுமே பணப்பட்டுவாடா எளிதில் நடக்கு ம். ஊழியர்கள் எண்ணிக்கையை உடனடி யாகப் பெருக்குவது வங்கிகளுக்கு அதிக செலவு பிடிக்கும் அம்சமாகவே இருக்கும். தவிர, அதை உடனடியாகச் செய்வதும் சாத் தியமற்றது.
தவிர, ஏற்கெனவே பல ஆயிரம் கோடி ரூபா ய் செலவு செய்துதான் பல இடங்களில் ஏடி எம் இயந்திரங்களை அமைத்திருக்கின்றன வங்கிகள். இனி இந்த இயந்திரங்களின் பயன்பாடு மிகப்பெரிய அ ளவில் குறையும் என்கிறபோது, இதனை மீண்டும் ஒழித்துக்கட்ட வேண்டிய கட்டாய ம் வங்கிகளுக்கு ஏற்படும். ஆக, தொழில் நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் மீண்டும் கற்காலத்தை நோக்கி செல்வதற்கான நடவடி க்கைகளையே ஆர்பிஐயின் இந்தப் புதிய விதி முறைகள் வழிவகுக்கிற மாதிரி இருக்கிறது என் பதே வங்கி வாடிக்கையாளர்களின் எண்ணமா க இருக்கிறது.
இந்த விஷயத்தில் முட்டைக்கு ஆசைப்பட்டு வாத்தினைக் கொன்ற கதையாக ஆகிவிடக் கூடாது என்பதே நம் வேண்டுகோள்.
இது karunanithimano இணையத்தின் பதிவு அல்ல‍!

வெள்ளி, நவம்பர் 11, 2011

கச்சா எண்ணெய் வாங்க காசில்ல! - அடுத்த விலை உயர்வுக்கு அடிபோடும் எண்ணெய் நிறுவனங்கள்

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அதிகரித்து விட்டதால், டிசம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய் வாங்க பணம் இருக்காது என்று இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டன எண்ணெய் நிறுவனங்கள். இதன் மூலம் மேலும் மேலும் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. பணம் இல்லை என்று கூறுவதன் மூலம், இறக்குமதி தடைபடும் என்பதால் அடுத்தடுத்த மாதங்களில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் சப்ளை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரித்து பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்கின்றன. அவற்றின் 2வது காலாண்டு (ஜூலை - செப்டம்பர் 2011) நிதி நிலை முடிவுகள் வெளியாகி வருகிறது. மிகப் பெரிய நிறுவனமான இந்தியன் ஆயில் இதுவரை இல்லாத அளவு ரூ.7,486 கோடி இழப்பை சந்தித்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைத்து (?!) விற்பதால் ஏற்பட்ட கடந்த 6 மாத இழப்பான ரூ.11,757 கோடியில் இதுவரை மத்திய அரசு எந்த இழப்பீடும் தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது இந்த நிறுவனம் இதே நிலைதான் மற்ற 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. நஷ்டம் காரணமாக வங்கிகளில் கடன் பெற்று கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்து வந்தன. இப்போது இந்தியன் ஆயிலின் வங்கி கடன் நிலுவை ரூ.73,000 கோடியை தாண்டி விட்டது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்த முடியாத நிலை மற்றும் கம்பெனியின் மோசமான நிதி நிலை காரணமாக வங்கிகள் இனி கடன் அளிக்க தயக்கம் காட்டுகின்றன. இதனால், நிதி நெருக்கடியில் எண்ணெய் நிறுவனங்கள் சிக்கியுள்ளதால் டிசம்பர் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபடும் என்று ஐஓசி தலைவர் படோலா நேற்று தெரிவித்தார். கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபட்டால் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டி வரும். அதன் தொடர்ச்சியாக பற்றாக்குறை ஏற்பட்டு பெட்ரோல், டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் சப்ளை அடுத்தடுத்த மாதங்களில் பாதிக்கப்படும் என்றார். ஆனால், பெட்ரோல் விற்பனையில் இவை அனைத்துமே நல்ல லாபம் ஈட்டுகின்றன. சில மாதங்களுக்கு முன் பெட்ரோல் விற்பனையில் கிடைத்த உபரி லாபத்தை வைத்து, டீசல் விற்பனை நஷ்டத்தை ஈடுகட்டுவதாகக் கூட தெரிவித்தன. ஆனால் இப்போது அனைத்திலுமே நஷ்டம் என்று கணக்கு காட்டுகின்றன. அதே நேரம், அரசு நிறுவனங்களுடன் போட்டி போட்டிக் கொண்டு பெட்ரோல், டீசல் விற்கும் ஷெல், எஸ்ஸார், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் கொழுத்த லாபம் ஈட்டி வருகின்றன.

புதன், செப்டம்பர் 21, 2011

விண்டோஸ் 8 ஒரு பார்வை

Thanks to: tamilinternet-hi.blogspot.com
மைக்ரோசாப்ட் தன் அடுத்த ஓபரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது. பல வலைமனைகளில் இதன் கட்டமைப்பு குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Building Windows 8 என்ற வலைமனையில் பல தகவல்கள் கிடைக்கின்றன.

விண்டோஸ் 95 சிஸ்டம் வந்த பின் பெரிய அளவிலான மாறுதல்களுடன் வர இருப்பது இந்த புதிய ஓபரேட்டிங் சிஸ்டமாகும். விண்டோஸ் 95 வெளியான போது டெஸ்க்டொப் கணணி பயன்பாடு தான் உச்சத்தில் இருந்தது.

மடிக்கணணிகள் சாதரண மக்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாத விலையில் அனைத்து நாடுகளிலும் இருந்தன. 
இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நுகர்வோர் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பான இயக்கத்தினை அனைத்து சாதனங்களிலும் எதிர்பார்க்கின்றனர்.


ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உள்ள வசதிகளை பெர்சனல் கணணிகளிலும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையிலான எதிர்பார்ப்புகளைச் சந்திக்கும் வகையில் விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே புதிய தொடுதிரை தொழில்நுட்பம் கொண்டதாகவும், வழக்கமான பயன்பாடும் இணைந்ததாகவும் விண்டோஸ் 8 அமையும். இந்த சிஸ்டம் ஏ.ஆர்.எம். மற்றும் இன்டெல் சிப்கள் என இரண்டு வகை ப்ராசசர்களில் இயங்கும்.


தற்போது மைக்ரோசாப்ட் தரும் ஆன்லைன் வசதிகளான ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் 365 மற்றும் இலவச ஆபீஸ் இணைய அப்ளிகேஷன்களை ஒருங்கிணைப்பதாக அமையும். மற்ற சிறப்பு அம்சங்களாக, யு.எஸ்.பி.3 சப்போர்ட் மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பினைக் கூறலாம்.


தொடுதிரை வசதிக்கென பெரிய அளவிலான பேனல்களை விண்டோஸ் 8 திரையில் காட்டும். இதனை மவுஸ் கொண்டும் இயக்கலாம். வழக்கமான ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் மற்றும் டெஸ்க்டொப் வகையறாவும் இதில் கிடைக்கும். தொடுதிரை தருவதன் மூலம் இப்போது வரும் டேப்ளட் பிசிக்களுடன், விண்டோஸ் போட்டியிட முடியும்.


மேலும் தன்னுடன் ஒப்பந்தம் கொண்டுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கட்டமைப்பினை வழங்கியுள்ளது. அவர்களும் தொடுதிரை அமைப்பில் இயங்கக் கூடிய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரித்து வருகின்றன.


விண்டோஸ் எக்ஸ்புளோரரின் செயல்பாட்டில் அதிகக் கவனம் விண்டோஸ் 8 தொகுப்பில் காட்டப்படுகிறது. கொப்பி, மூவ், ரீ நேம், டெலீட் எனப் பல செயல்பாடுகளை நாம் அடிக்கடி இதில் மேற்கொள்கிறோம். இந்த ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விண்டோவினை இதுவரை ஓபரேட்டிங் சிஸ்டம் தந்து வந்தது.


விண்டோஸ் 8 தொகுப்பில் இவை அனைத்தும் ஒரே விண்டோவில் இருக்கும். இதன் மூலம் பெரிய கோப்புகள், குறிப்பாக வீடியோ மற்றும் புகைப்பட கோப்புகளை எளிதாக ஒரே இடத்தில் கையாள முடியும். கோப்புகள் கொப்பி செய்யப்படும் போதும், நகர்த்தப்படும் போதும், எவ்வளவு பிட் டேட்டா மாற்றப்பட்டுள்ளது என வரைபடம் மூலம் தெரிய வரும்.


விண்டோஸ் விஸ்டாவில் தரப்பட்ட ரிப்பன் இன்டர்பேஸ் இதில் தரப்படுகிறது. இதன் மூலம் கோப்புகளை கையாள்வது எளிதாக இருக்கும் என்று தெரிகிறது. எக்ஸ்புளோரர் விண்டோவில் மூன்று டேப்கள் முக்கியமானதாக இடம் பெறும். அவை ஹோம், ஷேர் மற்றும் வியூ(Home, Share and View) ஆகும். இடது புறம் கோப்பு மெனு கிடைக்கும். ஹோம் டேப்பில், விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் மேற்கொள்ளப்படும் 84% செயல்களுக்கான கட்டளைகள் கிடைக்கும்.


ஒரு கோப்பை அதன் டைரக்டரிக்கான வழியுடன் கொப்பி செய்வதற்கு "Copy path" என்னும் கட்டளை இதில் தரப்படுகிறது. இந்த கட்டளையுடன் கோப்பு ஒன்றை இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோவில் கொப்பி செய்யப்படுகையில் கோப்பை அணுகுவது எளிதாகிறது.ஷேர் என்னும் டேப்பின் கீழ் மின்னஞ்சல் மற்றும் ஸிப் கட்டளைகள் கிடைக்கின்றன. பர்ன் டு டிஸ்க் (Burn to Disc), பிரிண்ட் மற்றும் பேக்ஸ் ஆகியவையும் இதில் உள்ளன.


புதிய கோப்பு மெனு மூலம் கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கிறது. இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோ மூலம், ஹார்ட் ட்ரைவினை பார்மட், ஆப்டிமைஸ், கிளீன் அப் போன்ற செயல்களை மேற்கொள்ளலாம். பிளாஷ் ட்ரைவ் ஒன்றை வெளியில் எடுக்க ஆட்டோ பிளே இயக்க இங்கு கட்டளையிடலாம்.இன்னும் தொடர்ந்து பல புதிய கட்டளைகளையும் வசதிகளையும் உள்ளடக்கியதாக விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.